Result செம்மையை இருக்கணும்னா...! சில சித்த மருத்துவ குறிப்புகள்...!
If you want to have perfect results Some Siddha medicine tips
யானைச்சொறி:
இது தடுப்பாற்றல் மண்டலக் கோளாறால் தோலில் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் சிவப்பான, தகடு போன்ற பொருக்குகள் உண்டாகும். வெள்ளி நிற செதில்கள் இவற்றைப் பொதிந்திருக்கும். இது பரவாது. உடலின் சிறு பகுதியையே இது பாதிக்கும். நோய்த் தடுப்பு மண்டலம், இயல்பான தோலணுவைக், கிருமி என தவறாக உணர்ந்து சைகைகளை அனுப்புவதால் புதிய தோலணுக்கள் அபரிதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிறுகுடல், பெருங்குடல் நோய் குறைய:
சிறுகுடல், பெருங்குடல் நோய் குறைய சீரகம், காசுக்கட்டி, களிப்பாக்கு, கோரோசனை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு மைபோல அரைத்து நான்கில் ஒரு பாகம் எடுத்து பாலில் கலந்துச் சாப்பிட்டு வந்தால் சிறுகுடல், பெருங்குடல் நோய்கள் குறையும்.
யானைச்சொறியின் வகைகளாவன:
சீழற்ற தடிப்புச் சொறி: இதுவே பொதுவாகக் காணப்படும் யானைச்சொறி வகை. யானைப்படையால் பாதிக்கப்பட்டவர்களில் 80%—90% பேருக்கு இவ்வகையே காணப்படுகிறது. தோலின் அழற்சியுற்ற பகுதிகள் தடிப்பாகக் காணப்படும். இப்பகுதிகள் தடிப்புகள் எனப்படும்.
செஞ்சொறி:
தோலில் பரவலான அழற்சியும் உண்டாகும். உடலின் பெரும்பகுதியில் தோல் உரியும். இதைத் தொடர்ந்து கடுமையான ஊறலும், வீக்கமும், வலியும் ஏற்படும். இவ்வகையான சொறி ஆபத்தானது. அதிக அழற்சியாலும் தோல் உரிதலாலும் உடல் தனது வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இழக்கும். தோல் தனது தடுப்பாற்றல் வேலையை ஆற்ற முடியாமல் போகும்.
சீழுடையது.
தொற்றற்ற சீழ் நிரம்பிய கொப்புளங்களாக இது தோன்றும். கைகள், கால்கள் போன்ற குறிப்பிட்ட இடங்களிலும், உடலின் எப்பகுதியிலும் படைகள் போலவும் தோன்றும். இதில் அடங்கும் வகைகள்:
எல்லா இடங்களிலும் வரும் சீழுடைய யானைச்சொறி
பஸ்ட்டுலோசிஸ் பல்மாரிஸ் எட் பிளாண்டாரிஸ் (Pustulosis palmaris et plantaris)
வளைய சீழுடை யானைச்சொறி
கைகால் தோலழற்சி
சிரங்கு
English Summary
If you want to have perfect results Some Siddha medicine tips