இரும்புச்சத்தை உடலுக்கு வாரி வழங்கும் கரிசலாங்கண்ணி கீரை தொக்கு.!
Health tips of Eating Karisalanganni Keerai thokku
நமது உடல் உறுப்புகளுக்கு வலிமையை அளித்து உடலின் ஆரோக்கியத்தை பேணிப்பெருக்கும் நலன்கொண்ட உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டால் நோயற்ற வாழ்வை நாம் வாழலாம். அந்த வகையில், கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு செய்வது எப்படி என காணலாம்.
கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு செய்ய தேவையான பொருட்கள் :
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை - 1 கட்டு
தேங்காய் துருவல் - அரை கிண்ணம்,
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கிண்ணம்,
உளுந்தம் பருப்பு - 2 சிறிய கரண்டி,
கடலை பருப்பு - 2 சிறிய கரண்டி,

நல்லெண்ணெய் - 3 சிறிய கரண்டி,
கடுகு - அரை சிறிய கரண்டி,
காய்ந்த மிளகாய் - 3 எண்ணம் (Nos),
கறிவேப்பிலை - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட கீரையை நன்றாக கழுவி, இலைகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளிக்க வேண்டும்.
இதனையடுத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை கொட்டி வதக்கிய பின்னர், தேங்காய் துருவலை சேர்த்து கிளறி, கீரையையும் சேர்த்து கிளற வேண்டும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீரை ஊற்றி வேகவைத்து இருக்க வேண்டும். சுவையான கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு தயார்.
ஆரோக்கிய குறிப்பு : கரிசலாங்கண்ணி கீரையில் இருக்கும் இரும்பு மற்றும் கால்சியம் சத்தால், அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈரல் மற்றும் கண்களுக்கு நன்மை கிடைக்கும். இரத்தத்தை சுத்தம் செய்யவும் உதவும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Health tips of Eating Karisalanganni Keerai thokku