அடடே விளாம்பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
health benfits of wood apple
ஆங்கிலத்தில் உட் ஆப்பிள் என்று அழைக்கப்படும் விளாம்பழம் நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று. நிறைய பேர் இந்த பழத்தினை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இதனை உண்பதை தவிர்த்து வருகின்றனர். ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய இந்த பழத்தில் வைட்டமின் பி12, ஏ, சி, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்தப் பழத்தை அதிகமாக சாப்பிட்டு வர பித்தித்தினால் ஏற்படும் வாந்தி, தலைவலி, குமட்டல் மற்றும் அதிகமான உமிழ்நீர் சுரப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். அஜீரணக் கோளாறுக்கும் இது சிறந்த மருந்தாகும்.
விளாம்பழத்தின் பிசினை இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் இந்தப் பழம் ஒரு மிகச் சிறந்த தீர்வாகும்.

குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் இந்தப் பழம் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும். மேலும் விளாம்பழத்தின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடித்து வர பித்தத்தினால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும்.
மேலும் இந்தப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் எலும்பு முறிவு போன்றவற்றை தடுக்கவும் உதவுகிறது. இவற்றின் ஓட்டை உரித்து நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து தண்ணீரில் கொதிக்க வைத்து தேனீராகவும் குடிக்கலாம்.
English Summary
health benfits of wood apple