கோடை கால வெயிலை சமாளிக்க தர்பூசணி பழம் ஒன்றே போதுமா.? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
Health benefits of watermelon
கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தர்பூசணி. கோடை வெப்பத்தை எதிர்த்து நம் உடல் போராடுவதற்கும் உடல் சூட்டை தணிப்பதற்கும் முதன்மையாக இருப்பது தர்பூசணியாகும். இத்தகைய தர்பூசணியில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான நன்மைகளும் இருக்கின்றன அவை என்ன என்று பார்ப்போம்.
தர்பூசணியின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று நோய் எதிர்ப்பு சக்தியாகும். தர்பூசணியில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால் இவை நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. இதன் காரணமாக உடல் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

மேலும் தர்பூசணியில் இருக்கக்கூடிய வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் நம் தலை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது . கூந்தல் அடர்த்தி மற்றும் இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அவை உதவுகின்றன.
தர்பூசணியில் சர்க்கரை இருந்தாலும் இதனை நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம் ஏனெனில் தர்பூசணியின் கிளைசெமிக் அளவு குறைவு. இது நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய பண்புகளை கொண்டிருக்கிறது. மேலும் தர்பூசணியில் மொத்தமாகவே 6.2 கிராமிலிருந்து 10 கிராம் வரை தான் சர்க்கரை உள்ளது.

தர்பூசணியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் நிறைந்து இருக்கின்றன. இவற்றின் கலோரி மிக மிக குறைவாகும் மேலும் இவற்றை சாப்பிடும் போது நமக்கு முழுமையான ஒரு உணர்வை கொடுக்கிறது. இதன் காரணமாக உடல் எடை குறைப்பு மற்றும் உடல் எடையை பராமரிப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வைக்கிறது.
English Summary
Health benefits of watermelon