வெயில் காலத்தில், இதையெல்லாம் சாப்பிட்டால்.. வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.!
Foods to eat in summer
வெயில் காலம் தொடங்கி விட்டாலே நிறைய பேருக்கு வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வியர் குரு, சரும அலர்ஜி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, போன்ற பிரச்சனைகள் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக இருக்கும்.
இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்து உடலை குளிர்ச்சியாக வைப்பது எப்படி என பார்க்கலாம்.
தர்பூசணி இவற்றில் நீர் சத்து அதிகம் நிறைந்துள்ளது. கோடைகாலங்களில் தர்பூசணி எளிமையாக கிடைக்கக் கூடியது. இதை அடிக்கடி உண்டு வரலாம்.
வெள்ளரிக்காய்,வெள்ளரிபழம், இதில் நீர்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.

முலாம்பழம் இது உடலை குளிர்ச்சியாக வைக்கக் கூடியது. மேலும், இளநீரும் இயற்கையாகவே கிடைக்கக்கூடியது.
மேலும் உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் இதை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலனை கொடுக்கும். இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. நுங்கில் நீர்ச்சத்து மற்றும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். மற்றும் வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களையும் தடுக்கும்.
மோர் தினமும் ஒரு டம்ளர் அருந்தலாம், வெயில் காலங்களில் ஏற்படும் தாகத்தை குறைக்கும். பழைய சாதம் உடலுக்கு மிகவும் நல்லது. பழைய சாதத்தில் சிறிதளவு மோர் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இது குளிர்ச்சியை கொடுக்கும், கம்மங்கூழ் இதுவும் உடலுக்கு மிகவும் நல்லது. இதுவும் உடல் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்.