சாப்பிடக்கூடிய மீன் வகைகளும்., அவற்றின் அளப்பரிய நன்மைகளும்.! - Seithipunal
Seithipunal


எல்லா மீன்களுமே உடலுக்கு நன்மை தருபவை தான் என்றாலும்  சில மீன்களில் இருக்கும் அதிகப்படியான பாதரசத் தன்மை  நம் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். அதுபோன்ற மீன்களை நம்  உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சூறை மீன், சுறா மீன் , வாளை மீன்  மற்றும் விலாங்கு மீன்  போன்ற மீன்கள் அதிக அளவு பாதரசத் தன்மை கொண்டவை. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளாமல்  தவிர்ப்பது நலம். சரி எந்த வகை மீன்களை சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

மத்தி மீன்: 

தமிழகம் மற்றும் கேரளா கடற்கரையோர பகுதிகளில்  கிடைக்கக்கூடிய மத்தி மீன்  ஏராளமான ஊட்டச்சத்துக்களை  கொண்டது. இந்த மீனின் விலை குறைவு. மேலும் இது எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு மீன் வகையாகும். இந்த மீனில் அதிக அளவிலான புரோட்டின் சக்தி நிறைந்திருக்கிறது. மேலும் இது ஒமேகா-3  சத்தின் பிறப்பிடமாகும். இந்த மீனை அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டால் நம் உடலில் நல்ல கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கெட்ட கொழுப்புகள் உற்பத்தி தடுக்கப்படும். இதை இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒரு மீன் வகையாகும்.

வஞ்சிரம் மீன்:

நம் தமிழக கடற்கரையோர பகுதிகளில் கிடைக்கக்கூடிய மற்றொரு சிறந்த மீன் வஞ்சிரம். இது ஆங்கிலத்தில் கிங் பிஷ் என அழைக்கப்படுகிறது. இந்த மீனில் ஏராளமான ஒமேகா 3 புரோட்டின்  வைட்டமின் ஏ வைட்டமின் பி6 மற்றும் பி12 ஆகிய சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.  இது ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் கண் பார்வை குறைபாட்டை சரி செய்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய கால்சியம் எலும்புகளை வலுவாக்குகிறது.

சங்கரா மீன்:

நம் பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கக்கூடிய மற்றொரு மீன் வகை சங்கரா. இந்த மீனில் மெர்குரியின் அளவு குறைவு. மேலும் இது  அதிக அளவிலான  புரோட்டினை கொண்ட ஒரு மீனாகும். இந்த மீன்களை  விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள தசை வளர்ச்சி மற்றும்  உடல் எடை கட்டுப்பாட்டிற்கு பயன்படுகிறது. மெர்குரியின் அளவு குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த மீனை அதிக அளவில் நம் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

திறை வாளை:

இந்தியாவின் சால்மன் என்று அழைக்கப்படும் திறை வாளை. இந்த மீன் இந்தியாவின் மேற்கு கடற்கரைப்  பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு மீன் வகையாகும். இவற்றில் அதிக அளவிலான அமினோ அமிலங்கள்  ஒமேகா 3 ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை  மிகச் சிறந்த சுவையைக்  கொண்டிருப்பது மட்டுமல்லாமல்  இதயத்திற்கு மிகவும் நன்மை  பயக்கக்கூடிய ஒரு மீனாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fishes that available in our place and its benefits 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->