கோழி காலை உண்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!! - Seithipunal
Seithipunal


நாம் சிறுவயதில் இருக்கும் நேரத்தில் நமது பெற்றோர்கள் நமக்கு கோழியின் கால்களை வாங்கி வந்து சமைத்து வழங்குவது வழக்கம். அதே போன்று ஆடின் கால்களை வாங்கி வந்து வீட்டிலேயே சூப் செய்து வழங்குவதும் வழக்கம். 

எதிர்பாராமல் கீழே விழுந்து நமது எலும்புகளில் ஏதேனும் அடிபட்டு., அதற்கான வைத்தியங்களை மேற்கொண்டு வரும் சமயத்தில் முடிந்தளவு ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட சொல்லி பல ஆலோசனை வழங்குவார்கள். ஆடுகாலில் இருக்கும் சத்தின் மூலமாக நமது உடலில் இருக்கும் எலும்புகள் வலுப்பெறும். அந்த வகையில் கோழி காலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.  

கோழி காலில் இருக்கும் கொலாஜன் என்ற பொருளின் காரணமாக சருமமமனது நன்றாக சீர்படுகிறது. சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதற்கு கோழி காலை உண்டு வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனைகளால் இருந்து விடுபட இயலும். 

கோழி காலில் இருக்கும் கொலாஜன் அதிகளவு இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான புரோட்டின் மற்றும் கால்சிய சத்துக்களை அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலமாக நமது உடலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கிறது. 

நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கொலாஜெனின் மூலமாக வெளியேற்றப்பட்டு., நமது உடலின் நலமானது பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலமாக நமது எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெற்று., எலும்புகள் வலுப்பெறுகிறது. 

நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது  பாதுகாக்கப்பட்டு., நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து நமது உடலின் நலத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது நமது உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்படும் பட்சத்தில்., அந்த காயங்கள் அனைத்தும் விரைவில் குணமாகும். நமது நகங்களுக்கு அதிகளவு வலு மற்றும் பற்களின் ஈறுகளை வலுப்படுத்துவது போன்ற நன்மைகளை செய்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eating chicken legs to get more energy for your body


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->