உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட, கோடைகாலத்தில் என்னென்ன சாப்பிடலாம்?..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலரும் வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்து வருகின்றனர். பல முன்னணி நிறுவனங்களில் குளிர்ந்த சூழ்நிலையில் பணியாற்றி வந்த பலரும், பணியை முடித்துவிட்டு வரும் போது அல்லது பணிகளுக்கு செல்லும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழிதெரியாமல் திகைத்து வருகின்றனர். 

கோடையில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணி, கிருணிப்பழ ஜூஸ், இளநீர், பிற இயற்கையான பழச்சாறுகள், மண்பானை நீர் என்று களமிறங்கி வெயிலை சமாளித்து வருகின்றனர். அந்த வகையில், உடலுக்கு குளிர்ச்சியை தரும் பானங்கள் குறித்து காணலாம்.

மோர்: 

பொதுவாக தயிர் என்பது குளிர்ச்சியான உணவாக பலராலும் அறியப்பட்டு வருகிறது. தயிர் செரிமான மண்டலத்தில் மந்தத்தை ஏற்படுத்தி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். தயிரை கடைந்து எடுக்கும் மோர் உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும். கோடைகாலங்களில் அதிகளவு மோரினை எடுத்துக்கொள்ளலாம். 

புதினா: 

புதினா இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சியை தரும் பொருள் ஆகும். புதினா தேநீர், புதினா துவையல், புதினா சட்னி என்று ஏதேனும் ஒரு வகையில் புதினாவை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். செரிமானத்திற்கு பெரிதும் உதவும். அலர்ஜி பிரச்சனை, தலைவலி, வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் போன்றவற்றை புதினா பாதுகாக்கிறது.

வெள்ளரிக்காய்: 

நீர் நிறைந்த உணவுகளில் வெள்ளரியும் ஒன்று. இது குளிர்ச்சியை தரும் காய் ஆகும். கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் வெப்பத்தால் நீர்சத்து குறைவதை தடுக்க, வெள்ளரியை சாப்பிடலாம். குறைந்த அளவு கலோரிகள் கொண்ட வெள்ளரியால் உடலின் நீர்சத்து பாதுகாக்கப்படும். உடலின் எடையும் குறையும். 

தர்பூசணி: 

தர்பூசணி பழம் வருடம் முழுவதும் கிடைக்கும் என்றாலும், கோடைகாலங்களில் கிடைக்கும் தர்பூசணிக்கு என தனி மதிப்பு உண்டு. தர்பூசணி, முலாம்பழம், கிரிணி பழம் போன்றவை உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும், வயிற்றுக்கும் குளிர்ச்சியை தரும். உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

During Summer Season Eat this items to Reduce Body Heat 11 April 2021 Health tips


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->