சர்க்கரை நோயாளிகள் 'எந்த' முறையில் தேங்காயை உணவில் சேர்க்க வேண்டும் தெரியுமா? - Seithipunal
Seithipunal



தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் தினசரி உணவில் தேங்காய் சேர்க்கும் பழக்கம் உண்டு. தேங்காயில் சட்னி அரைத்தோ, பொரியலில் துருவிப் போட்டோ, தேங்காய் பால் எடுத்தோ ஏதோ ஒரு வகையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் தேங்காய் உணவில் ஒரு அங்கமாக இருக்கிறது. 

தேங்காய் என்பது காய்கறி வகையைச் சேர்ந்தது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் தேங்காய் உண்மையில் பழ வகையைச் சேர்ந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. மாம்பழம், செர்ரி போன்ற பழங்கள் அடங்கிய 'ட்ரூப்' வகையைச் சேர்ந்த ஒரு பழம் தான் 'தேங்காய்'. 

தேங்காயில் வைட்டமின்களும், மாங்கனீஸ், பொட்டாசியம், காப்பர், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. மேலும் இதில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள லாரிக் அமிலம் உள்ளது. மேலும் 100 கிராம் அளவிலான தேங்காயில் 354 கலோரிகள் உள்ளன. 

மேலும் 100 கிராம் தேங்காயில் 15 கிராம் கார்போஹைட்ரேட், 33 கிராம் கொழுப்பு, 3 கிராம் புரதம் மற்றும் 9 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதன் கிளைசெமிக் அளவு 51 ஆக உள்ளது. இந்நிலையில் தேங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல என்று ஒரு கருத்து நிலவுகிறது. 

ஆனால் உண்மை அப்படியல்ல. தேங்காயை குறைந்த அளவில் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். தேங்காய் பால் எடுத்துக் கொள்வதை மட்டும் தவிர்த்தல் நலம். தேங்காய் பாலில் நார்ச்சத்து முழுவதும் நீக்கப்பட்டு, வெறும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமே எஞ்சி இருக்கும். மேலும் இதன் கிளைசெமிக் அளவும் 97 ஆக உயர்ந்து விடும். எனவே சர்க்கரை நோயாளிகள் தேங்காய் பாலை தவிர்த்து விடுவது நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diabetes Patients How Can Eat Coconut


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->