டெங்குவிற்கு இந்த இரண்டு மட்டும் போதும்.. ஆய்வில் கண்ட முடிவுகள்..! - Seithipunal
Seithipunal


டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையில் மிக முக்கியமானது அந்த நோய் குறித்த சரியான புரிதல் தான். இந்த தேங்குவனது மரணம் வரை கொண்டு செல்லக்கூடிய கொடிய நோய் என்று கூறப்பட்டாலும், வெறும் பாராசிடமால் மற்றும் நீராகாரம் மட்டும் கொண்டு எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய் ஆகும். 

இது இரண்டை தவிர வேறு மருந்தோ, அதி நவீன கருவிகளோ இல்லாமல் குணப்படுத்தக்கூடிய நோயாகும். எனவே டெங்கு என்று அறிந்தவுடன் பாதிக்கப்பட்டோரின் குடும்பம் முதலில் பதட்ட படாமல் இருக்க வேண்டும். மேலும், சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் பதட்டப்பட கூடாது. 

உடல்நலக் கல்வியாளர் கங்காதரன், 'டெங்கு சிகிச்சையின் போது ஊசி போடுவது தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தலாம்.' என கருத்து தெரிவித்துள்ளார். டெங்குவால் பாதிக்கப்பட்டது தெரிந்தவுடன் ப்ரூபன் மற்றும் மெஃநனமிக் ஆசிட் மருந்துகளை கொண்டு மருத்துவர்கள் காய்ச்சலை குறைக்க முயல்கின்றனர். 

இந்த மருந்துகள் கல்லீரலை பாதிக்ககூடியது. அதோடன் ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜையை பலவீனப்படுத்த கூடும்.  டெங்குவுக்கு என்று தனிப்பட்டமுறையில் மருந்துகள் எதுவுமில்லை. காய்ச்சலை குறைக்க பாரசிடாமால் மற்றும் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க நீராகாரம் ஆகியவை வழங்கினால் போதும். 

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, பச்சிளங்குழந்தைகள் பிரிவு தலைவர் சீனிவாசன் உடலில் செலுத்தப்படும் நீர் சத்துகள் சரியான அளவில் இருக்க வேண்டியது மிக அவசியம் என்று கூறியுள்ளார்.

டெங்கு சிகிச்சைக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாமல், ஆண்டி பயாடிக் கொடுத்ததற்காக தூத்துக்குடியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவர்  மீது தமிழக அரசு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் புகார் அளித்து இருக்கின்றது. இந்த புகார் விசாரணையில் இருக்கின்றது. தேவையற்ற அதீத சிகிச்சையானது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதற்கு தமிழக அரசின் இந்த நடவடிக்கையே சான்றாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DENGUE SOLUTION


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->