பிறந்த குழந்தைக்கு, தவறான தடுப்பூசி! சர்ச்சையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை!
Controversy of Immunity to Babies Born by Vaccination in Kovilpatti Government Hospital
கோவில்பட்டி புதுக்கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் 29ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு கனிஷ்கா ஸ்ரீ என்று பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர்.
சென்ற மாதம் 31ஆம் தேதி , கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கனிஷ்காஸ்ரீ க்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை மகேஸ்வரன் அதற்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளை பற்றி கூறியதாவது: தடுப்பூசி செலுத்திய பிறகு குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மழையின் காரணமாக, இந்த நடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம். 2 மணி நேரத்திற்கு பின்னர் இந்த மாத்திரையை கொடுங்கள் எனக் கூறி ஒரு டியூப் மாத்திரை மற்றும் ஒரு சிறிய மாத்திரை ஆகியவற்றை ஓபி சீட்டுக்கு பின்புறம் எழுதித் தந்தனர்.
கண்காணிப்பு கேமராவில் ஆராய்ந்தால் தெரியும் நாங்கள் அனைத்து மாத்திரைகளையும் அந்த அரசு மருத்துவமனை மருந்தகத்தில் தான் வாங்கினோம்.

குழந்தைக்கு தொடர்ந்து நடுக்கம் குறையாததால் கடந்த 4ஆம் தேதி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம்.
குழந்தையின் வாய்ப்பகுதி முழுவதும் புண்ணாகி இருப்பதால், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுத்து வருகிறோம். வேறு எந்த குழந்தைக்கும் இது போன்ற நிலை வரக்கூடாது எனக் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, குழந்தை மார்ச் 29-ம் தேதி பிறந்தது. மே 31-ம் தேதி அவர்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்போது அவர்களுக்கு பாராசிடாமல் சிரப் மட்டுமே பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அதனை வாங்கவே இல்லை.
ஏற்கெனவே ஏப்.7-ம் தேதி குழந்தை கனிஷ்காஸ்ரீயும், அவரது தாய் சிந்து ஆகியோர் மருத்துவ மனைக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்ததில் குழந்தை நலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையின் தாய்க்கு தான் Amoxycillin, Paracetamol, Chlorpeniramine ஆகிய 3 மாத்திரைகள் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தான் தற்போது கொடுத்ததாக அவர்கள் கூறுகின்றனர்” என்றனர்.
கோவில்பட்டி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி இதைப்பற்றி கூறும் போது, கடந்த 2021 இல் எங்கள் மகள் சுபலட்சுமியை காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக ஊசி செலுத்திய போது அது தவறாக இருந்துள்ளது.
எங்கள் மகளின் வலது கை திடீரென வீங்கி விட்டதால் மருத்துவர்கள், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முடியாது என்றதால் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அந்த மருத்துவமனையிலும் முடியாது என்றதால் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் தான் மகளைக் காப்பாற்ற முடிந்தது.
ஆனால் எங்கள் மகளின் வலது கை மணிக்கட்டு,அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு விட்டது. இதுத் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் என்றார்.
English Summary
Controversy of Immunity to Babies Born by Vaccination in Kovilpatti Government Hospital