முதல்வரின் இன்சூரன்ஸ் கார்டு இருந்தா தான் மருத்துவமாம்-அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்வரால் வழங்கப்பட்ட இன்சூரன்ஸ் கார்டு உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக நோயாளிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை விட முதல்வரின் இன்சூரன்ஸ் தொகையை வசூலிப்பதயே  குறிக்கோளாக வைத்துள்ளனர் . 

இதனால் நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது கூட முதல்வரின் இன்சூரன்ஸ் கார்டு இருக்கிறதா என கேட்கின்றனர். இல்லையென்றால் உடனடியாக எடுத்து வர உத்தரவிடுகின்றனர்.

இந்த இன்சூரன்ஸ் கார்டுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தான் வழங்கப்படும். இதற்காக கைரேகை, கண்ரேகை பதிவு செய்யப்பட்டு பதிவென்னும்   வழங்கப்படுகிறது.

 இந்த கார்டை பதிவு செய்வதற்காக தினமும் நுாற்றுக்கு மேற்பட்டோர் அலுவலகங்களுக்கு வருகின்றனர். இவர்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கை, கால்களில் மாவுகட்டுடனோ, குளுகோஸ் ஏற்றிய நிலையிலோ பசி, தாகத்துடன் பரிதாபத்துடன் வரிசையில் காத்திருக்க வேண்டி நிலையுள்ளது.

தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் இன்சூரன்ஸ் கார்டு கேட்டு அவர்களை அலைய வைப்பதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.முடிந்தால் மாவட்ட தலைமை மருத்துவமனையிலேயே இன்சூரன்ஸ் கார்டு வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவத்தை தவிர்க்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister insurance card, you can get medical treatment - Government hospital doctors.!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->