முந்திரிப் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயங்கள்.!
Cashew nuts wetly benefits in Tamil
இனிப்பு வகைகளில் அதிகமாக பயன்படுவது முந்திரி. எந்த வகை இனிப்பு செய்தாலும் அதில் முந்திரியை சேர்த்து தான் செய்வார்கள். இந்த முந்திரியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த முந்திரியை இரவு பாலில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது. மற்றும் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்துகிறது.

முந்திரியில் நல்ல கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. முந்திரியை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் அதில் உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து கிடைக்கிறது. இந்த கொழுப்பானது, உடலுக்கு நன்மை தரக்கூடியது.
அதனால் பயப்பட வேண்டியதில்லை. மேலும், இது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. உடலுக்கு ஜீரண சக்தியை கொடுக்கிறது. நரம்புகளுக்கு வலுவை சேர்க்கும்.
English Summary
Cashew nuts wetly benefits in Tamil