மாரடைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர், மாரடைப்பால் மரணம்!
Cardiologist Doctor Passed Away Unexpectedly In Gujarath
குஜராத் மாநிலத்தை சேர்ந்த கௌரவ் காந்தி என்ற இதய மருத்துவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஜம் நகரில் வசித்து வந்தவர் கவுரவ் காந்தி. இவர் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் பட்டத்தை சொந்த மாநிலத்திலும் மேற்கொண்டு கார்டியாலாஜி சம்பந்தப்பட்ட படிப்பை அகமதாபாத்திலும் முடித்தவர்.
வாழ்நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்த மருத்துவர் என்ற பெருமை இவருக்கு உண்டு என்கிறார்கள் சுற்றுப் பகுதியை சேர்ந்த மக்கள்.கடந்த திங்கள் கிழமை நோயாளிகளுக்கு வழக்கமாக சிகிச்சை அளிப்பது போலவே தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.

இரவு குடும்ப உறுப்பினர்களுடன் உணவு அருந்திவிட்டு படுக்கைக்குச் சென்றவர் மறுநாள் காலை எந்த அசைவும் இல்லாமல் இருந்திருக்கிறார். இதைக்கண்டு அதிர்ச்சி உற்ற அவரது மனைவி உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் கௌரவை அனுமதித்து இருக்கிறார்.
உடனடியாக மருத்துவ முதலுதவிகள் அளிக்கப்பட்ட போதும்,கவுரவ் காந்தி உயிரிழந்துள்ளார். தன்னுடைய முகநூல் பக்கத்தில் மாரடைப்பை பற்றி பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவர் கௌரவ் காந்தி தன்னுடைய இளம் வயதில் மாரடைப்பால் இறந்திருப்பது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
Cardiologist Doctor Passed Away Unexpectedly In Gujarath