கத்தரிக்காய்க்கு கத்தரி போட்டுவிடாதீர்கள்? அதன் பயன்களை பாரீர்.!
brinjal benefits and health
நம் அன்றாட வாழ்க்கையில் பல காய்கறிகளையும், பல பழங்களையும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு கத்தரிக்காய். சைவை உணவுக்காரர்களோ, அசைவை உணவுக்காரர்களோ கத்தரிக்காயை பயன்படுத்தாமல் இருப்பதில்லை.
சில பேர் நேற்றும் கத்தரிக்காய், இன்றும் கத்தரிக்காயா? என்று சலித்துக் கொள்வார்கள். என்றாலும் பெரும்பாலோருடைய உணவில் கத்திரிக்காய் தவறாமல் இடம்பெறுகிறது. கத்தரிக்காயில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அதை நாம் பயன்படுத்துகிறோம்.
கத்தரிக்காய்க்கு ஆங்கிலத்தில் EGG PLANT என்று பெயர். இந்தியாவின் தென்மாநிலங்களில் காய்கறிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலிடம் வகிக்கின்றன. கத்தரிக்காயில் இளம் பிஞ்சு தான் நல்லது. அதிலும் கருநீலமாக உள்ள குட்டை கத்தரிக்காய்களே மருத்துவ பலன் நிரம்ப உள்ளவை. கத்தரிக்காயின் கருநீல உருண்டை, பூச கருநீலம், வரிக்கத்தரி, முள்ளு கத்தரி, அண்ணாமலி கத்தரி போன்றவை புகழ் வாய்ந்த இனங்கள் ஆகும்.
கத்தரிக்காயில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், ஆக்சாலிக் அமிலம், கரோட்டின் போன்றவை உள்ளன.
கத்தரிக்காய் வெப்பத்தை அதிகரிக்கிறது, பசியை உண்டாக்குகிறது, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, இதயத்தை வலுப்படுத்துகிறது. காசநோய்க்கு இது ஒரு கண் கண்ட மருந்து. சிறுநீர் வெளியேறும் போது கடுப்பு உண்டாகிறது என்றால் கத்தரிக்காய், கடுகடுப்பை கண்டிக்கும்.
English Summary
brinjal benefits and health