ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆட்டு மண்ணீரலின் அற்புத நன்மைகள்.!
Benefits of suvarotti
ஆட்டுக்கறி பெரும்பாலும் ஒரு விருப்பமான இறைச்சியாகும். அதன்படி ஆட்டின் இறைச்சி மட்டுமில்லாமல், அதன் உறுப்புகளான குடல், தலை, கால், மண்ணீரல், ஈரல் போன்றவையும் விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது.
இதில், சுவரொட்டி என்று அழைக்கப்படும் ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவதால் பலவித நன்மைகள் கிடைக்கிறது. அதன்படி ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
ஆட்டு மண்ணீரலை வறுவல் செய்து சாப்பிடலாம் அல்லது நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடலாம். மேலும் ஆட்டு மண்ணீரலின் சுவை ஈரலின் சுவையைப் போலவே இருக்கும்.
ஆட்டு மண்ணீரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக புரோட்டின், இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி12, பாஸ்பரஸ், செலினியம், சிங்க் போன்ற சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. அதனால் வாரத்திற்கு ஒருமுறை ஆட்டு மண்ணீரல் சாப்பிடலாம்.

ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவதால் ஒரு நாளைக்கு தேவையான இரும்பு சத்து முழுமையாக கிடைக்கிறது. எனவே உடலில் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் அல்லது ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டு மண்ணீரலை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம்.
ஆட்டு மண்ணீரல் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி உடலை பாதுகாக்கிறது.
பெருங்குடல் அழர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்டு மண்ணீரலை உணவில் சேர்த்துக் கொண்டால் விரைவில் குணமாகும். ஏனென்றால் ஆட்டு மண்ணீரலில் பெருங்குடல் அழர்ச்சியை சரி செய்யக்கூடிய ஆற்றல் உள்ளது.
சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆட்டு மண்ணீரலை சாப்பிட்டால் சிறுநீரக தொற்று ஏற்படுவதை தடுக்கிறது. அதனால் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மாதம் இரண்டு முறை சாப்பிடலாம்.