சுரைக்காயில் உள்ள மருத்துவகுணங்கள்.! மிஸ் பண்ணிடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நிலையில் பொதுவாக வெயில் காலம் தொடங்குவதற்கு முன்னே நாம் வெயிலால் பலவிதமான வெயில் பிரச்சனைகளை அனுபவித்து வந்தோம். இந்த நிலையில் வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மற்றும் கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இருக்கும் உடல் சூட்டை குறைப்பதற்கும் சுரைக்காய் எவ்வாறு உதவுகிறது என்பதை நாம் காண்போம். 

சுரைக்காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு மற்றும் உடல் சூடானது குறையும், சுரைக்காயில் இருக்கும் வைட்டமின் பி, வைட்டமின் சி சத்துக்கள் மூலமாகவும், அதில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து, இரும்பு சத்து, தாது உப்பு, பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் மூலமாகவும் நமது உடல் சூடானது குறைக்கப்படுகிறது. 

suraikkai, seithipunal

சுரைக்காயின் சதைப் பகுதியை எடுத்து ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து பருகி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளில் இருந்தும் சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்கள் இருந்தும் விலக்கம் அடையலாம். அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை உடனடியாக நீங்கும். 

கோடை காலத்தில் அதிகளவு சுரைக்காயை சாப்பிட்டு வருவதன் மூலமாக நா வறட்சி மற்றும் கோடைகால தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம், கோடை காலத்தில் ஏற்படும் கைகால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டும் பட்சத்தில் அது அந்த இடத்தில் இருக்கும் எரிச்சலானது குறையும், உடலையும் குளிர்ச்சியாக இது வைத்துக் கொள்ளும். 

சுரைக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கணிசமாக குறைத்து அவர்களின் உடலை பாதுகாக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் தலைவலி நீங்குவதற்கு சுரைக்காயின் சதைப் பகுதியை எடுத்து நெற்றியில் பற்று போன்று போடுவது மூலமாக கோடைகால தலைவலியானது உடனடியாக நீங்கும். 

suraikkai, seithipunal

தினமும் சுரைக்காயை ஏதோ ஒரு வகையில் கூட்டாகவோ பொரியலாகவோ அல்லது குழம்பாகவோ வைத்து சாப்பிடும் பட்சத்தில் நமது உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு மற்றும் வெயில் காலங்களில் ஏற்படும் வெப்ப நோய்கள் போன்றவற்றில் இருந்து நாம் விலக்கம் அடைந்து நமது உடலை பாதுகாக்க முடியும். நமது உடலில் பொதுவாக தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறி விடும். 

சுரைக்காய் இலைகளை நீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் பெருவயிறு நீர்க்கட்டு போன்ற பிரச்சனையில் இருந்தும், இதனால் ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கும் மருந்தாக அமையும். இந்த சுரைக்காயை தினமும் மதிய வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் இருக்கும் பித்தமானது சமநிலையை அடைந்து நமது உடலை பாதுகாக்கும். இது மட்டுமல்லாது நரம்புகளுக்கும் தேவையான புத்துணர்வைக் கொடுத்து நமது உடலை நல்ல நிலையில் வலுப்படுத்தும்.

English Summary

benefits of suraikkai in tamil


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal