உடலின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் பிரண்டையின் அற்புதமான நன்மைகள்.!
Benefits of pirandai
நாட்டு மருத்துவத்தில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாக இருப்பது பிரண்டை செடி. பிரண்டை சாப்பிடுவதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. அதன்படி பிரண்டையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி நன்றாக அரைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். மேலும் அடிபட்டு வீக்கம் ஏற்பட்ட இடத்தில் பிரண்டையை அரைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பெருங்குடல் புண் குணமாகும். குறிப்பாக பிரண்டை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெருகும். மேலும் செரிமான கோளாறு, மலச்சிக்கலையும் போக்குகிறது.
பிரண்டை தூளை சூடான நீரில் கலந்து வெளிப்புறம் தடவினால் எலும்பின் வலிமை அதிகரிக்கும். மேலும் பிரண்டையின் இலைகள் மற்றும் தண்டுகள் எலும்பு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.

பிரண்டையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடல் குறைக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு வலிமையைத் தரும்.
பிரண்டையில் அயோடின் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் அழற்சி மற்றும் வலி குறையும். பிரண்டையை, இஞ்சியுடன் சேர்த்து அரைத்து துவையலாக செய்து சாப்பிட்டால் பசியின்மைக்கு சிறந்த மருந்தாக அமையும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிகரித்த ரத்தப்போக்கை சரி செய்ய, 20 மில்லி லிட்டர் பிரண்டை சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 3 கிராம் வெள்ளை சந்தனத்தூள் ஆகியவற்றை சேர்ந்து குடிக்க வேண்டும்.