பல நோய்களுக்கு ஒரே தீர்வு - பெருங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா?
benefits of perungayam
சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பெருங்காயம். ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இந்த பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆஸ்துமா சரியாகும்.

அதுமட்டுமல்லாமல், தலைவலி அஜீரணக் கோளாறு மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கும் சிறந்த நிவாரணத்தை தரக்கூடியதாக உள்ளது. இப்படி நிறைய மருத்துவ குணம் கொண்ட இந்த பெருங்காயத்தில் இருக்கும் அமிலங்கள் இதயத்தின் ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புகளை நீக்கி இதய நோய் அபாயத்தையும் தவிர்க்கிறது.
மலச்சிக்கல், தீராத பல் வலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடும் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகளுக்கு எதிரான ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது.