இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இருக்கா..? இல்லையா..? எய்ம்ஸ் ஆய்வு சொல்வது என்ன..? - Seithipunal
Seithipunal


கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர், நாட்டில் இளம் வயதினர் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில், ஆய்வு கடந்த ஓராண்டு காலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் படி, வந்துள்ள தகவல்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் அரவா தெரிவித்துள்ளதாவது:

அதாவது, கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அத்துடன், இளம் வயதினரின் திடீர் மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன. இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக திடீர் மரணம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய மரணங்கள் இந்தியாவில் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை என்றும், எய்ம்ஸ் ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில் இவற்றை ஆவணப்படுத்தி உள்ளதாக சுதிர் அரவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது போன்ற இளம் வயதினரின் மாரடைப்பு மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எதேனும் தொடர்பு உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:

தங்களின் ஆய்வை தொடங்குவதற்கு முன்பு இதற்கான சாத்தியங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், ஆய்வின் முடிவில் கிடைத்திருக்கும் தகவல்களின்படி கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலக அளவில் பெரும்பாலும் முதியவர்கள் மாரடைபால் உயிரிழக்கின்றதாகவும், அது பற்றிய பல்வேறு ஆய்வறிக்கைகள் இருக்கின்றன. ஆனால், இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்பான ஆய்வறிக்கைகள் நம்மிடம் இல்லாமல் இருந்த நிலையில், அது குறித்தும் தற்போது அறிக்கையில் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், இது தொடர்பாக தனித்தனியாக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஆனால், கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது எய்ம்ஸ் ஆய்வில் தெளிவாக தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An AIIMS study says there is no connection between sudden deaths in young people and the coronavirus vaccine


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->