பாசிப்பயரில், இத்தனை பயன்களா.? தெரிந்தால் விட்டு வைக்க மாட்டீர்கள்.!! - Seithipunal
Seithipunal


தினமும் பல்வேறு விதமான பணி சூழல்களில் பணியாற்றி வரும் நாம்., நமது உடலை பாதுகாப்பதற்கு தினமும் சத்துக்களை வழங்கும் உணவு பொருட்களை உட்கொள்வது உடலுக்கு நல்லது. உடலுக்கு சத்துக்களை வாரி வழங்குவதில் பயறு வகைகளுக்கும் இடம் உண்டு. 

சிறுபயறு மற்றும் பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக., நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. இதில் குறைந்தளவு கொழுப்பு சத்தானது உள்ளதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாது சுண்ணாம்பு சத்து மற்றும் பொட்டாசிய சத்தும் அடங்கியுள்ளது. 

pasipayaru, seithipunal

நமது உடல் எடையை குறைப்பதற்கு பச்சை பயிரானது அதிகளவு பங்கை கொண்டுள்ளது. இதில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக அதிகளவு பசியை தாங்கும் வல்லமையை நமக்கு அளிக்கும். உடல் எடை அதிகம் உள்ள நபர்கள், இந்த பாசிப்பயறை ஒரு நேரத்திற்கு உணவாக கூட பயன்படுத்தலாம். நொறுக்கு தீனிகளை திண்பதற்கு பதிலாக இந்த பாசிப்பயறை அரைத்து கடுகு, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து சாப்பிடலாம். 

pasipayaru,seithipunal

பாசிப்பயறை முளைகட்டி தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் நமது உடலில் இருக்கும் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது இரத்த சோகை பிரச்சனையை வராமல் பார்த்து கொள்ளும். கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குறைந்தளவு சுரக்கிறது என்றால், முளைகட்டிய பாசிப்பயறு, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து அரைத்து பாலாக குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கும். 

நீண்ட நாட்களாக இருந்த வயிற்றுப்புண் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு பாசிப்பயறு மகத்தான ஒன்றாகும். இதில் இருக்கும் காரத்தன்மையை கட்டுப்படுத்தும் பொருளின் மூலமாக அல்சர் பிரச்சனையால் அவதியுற்ற நபர்கள் குழம்பு வைத்து சாப்பிடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of pasipayaru


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->