நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: நகராட்சி தலைவர் பதவி நீக்கம்!
No confidence motion succeeds Mayor removed from office
தி.மு.க.வை சேர்ந்த சேர்மன் பதவி பறிபோன சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், என மொத்தம் 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4-ந் தேதி நடந்த நகர்மன்ற சேர்மன் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தலா 15 வாக்குகளை பெற்று சமநிலை வகித்தது. தொடர்ந்து தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மன் ஆக தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நகராட்சியில் சேர்மன் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என கூறி சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் கமிஷனர் நாகராஜனிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் இன்று சேர்மன் உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். 30 கவுன்சிலர்களில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் சேர்மன் உமா மகேஸ்வரி சேர்மன் பதவி பறிபோனது.
English Summary
No confidence motion succeeds Mayor removed from office