அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் ! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர்  தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 23/06/2025 முதல்  2025- ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இங்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் SCVT  பிரிவில் சர்வேயர்,மெசனிஸ்ட்,ரெப்ரிஜரேட்டர் மற்றும் A/C டெக்னீசியன் மற்றும் இன்பிளாண்ட் லாஜுஸ்டிக் அஸிஸ்டணட் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.

இங்கு பயிலும் பயிற்சியாளர்களுக்கு ரு. 750 மாதாந்திர உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி,விலையில்லா சீருடைகள்,விலையில்லா பாதுகாப்பு காலணிகள்,விலையில்லா பாடப்புத்தகங்கள்,விலையில்லா வரைபட உபகரணங்கள்,பேருந்து சலுகை,6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த  மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் மாதந்தோறும் ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை, பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம் என அரசு வழங்கும் பல சலுகைகள் உள்ளன.

வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது  வரை, மகளிருக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.எனவே மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளில் உடனடியாக  நேரடி சேர்க்கை முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கும்மிடிப்பூண்டி, அவர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். தொடர்பு கொள்ள அரசினர் தொழிற்பயிற்சி  நிலைய முதல்வர்.இராஜலஷ்மி, அரசினர் தொழிற்பயிற்சி  நிலையம்,சிப்காட் வளாகம்,  கும்மிடிப்பூண்டி- 601 201. கைபேசி எண் 8248738413, 7904159767, 9444923288,9940258464 என திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enrollment of students in the government vocational training center has begun District Collector M Prathap informs


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->