பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடுகிடும் சம்பவம்...! லாரி மோதியதால் பறிபோன உயிர்...! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மன்னார்குடி ராவணன் குட்டை தெருவை சேர்ந்த கேபிள் தொழில் செய்யும் சிவகணேஷ் என்பவரது மகன் 13 வயதான அமரேஷ் என்பவர். இவர் மன்னார்குடியிலுள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் இன்று காலையில் மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, மோட்டார் சைக்கிள் மன்னார்குடி ருக்மணிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தப்போது எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கடுமையாக மோதியது. இதில் இருவரும் மோட்டார்சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்.அப்போது பள்ளி மாணவன் அமரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

மேலும், சிவகணேஷ் பலத்த காயத்துடன் உயிர்தப்பியுள்ளார்.இதுதொடர்பாக தகவலறிந்ததும் மன்னார்குடி காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகணேசை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் பலியான அமரேஷ் உடலை காவலர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இது குறித்து மன்னார்குடி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்ற போது விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A shocking incident while on the way to school A life lost due to a collision with a lorry


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->