வெங்காயமும் - தமிழ் மருத்துவமும்... வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள்.!! - Seithipunal
Seithipunal


நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் வெங்காயத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் போன்று பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதுமட்டுமல்லாது பாலுணர்வை தூண்டும் சக்தியும் வெங்காயத்தில் அதிகளவு நிறைந்துள்ளது. நம்மை எதிர்பாராத சில சமயங்களில் தேனீ மற்றும் குளவி போன்ற பூச்சிகள் நம்மை கொட்டுவதுண்டு. 

அவ்வாறு தேனீயோ அல்லது குளவியோ நம்மை கொட்டிவிட்டால்., சிலர் அதனை கண்டும் காணாது சென்று விடுவது வழக்கம். சிலருக்கு கொடுக்கின் வீரியத்தால் உடல் உபாதைகள் மற்றும் அதிகளவு வலி ஏற்பட்டு தாங்க முடியாமல் இருப்பார். இவர்களுக்கு சின்ன வெங்காயத்தை எடுத்து நன்றாக நசுக்கி கொடுக்கு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். 

வெங்காயத்தில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பொருளின் காரணமாக, அது தேனீ மற்றும் குளவி கொட்டிய கொடுக்கில் இருக்கும் விஷத்தினை முறித்து நமது உடலை பாதுகாக்கிறது. நமது உடலில் பொதுவாக ஏற்படும் அலர்ஜிக்கு காரணமாக ப்ராஸ்டாகிளான்டின்ஸ் என்ற வேதிப்பொருள் மூல காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு தன்மையால், விஷமானது சிதைக்கப்படுகிறது. 

நமது உடலிலும் விஷம் சேராமல் பார்த்து, விஷத்தின் நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. இயற்கையான மருத்துவம் என்னவென்றால், நாளொன்றுக்கு ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால், மருத்துவரை நாட வேண்டிய பிரச்சனை இருக்காது. இதனைப்போல வெங்காயத்தையும் தினமும் உணவில் சேர்த்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழ இயலும். 

வெங்காயத்திற்கு இதயத்தின் தோழன் என்ற பெயரும் உண்டு. வெங்காயத்தில் இருக்கும் வேதிப்பொருட்களின் காரணமாக இரத்தத்தில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ளும். கொழுப்பை குறைக்கும் தன்மையை தன்னுள் கொண்டுள்ளதால், உடலுக்கு நன்மையை அதிகளவில் சேர்க்கும். பொதுவாக ஆண்கள் எங்கு வேண்டும் என்றாலும் சிறுநீரை உடனடியாக கழித்து விடுவார்கள்... ஆனால் பெண்களுக்கு அவ்வாறு அல்ல. 

இதனால் பெண்கள் சிறுநீரை அடக்கி வைக்கும் நிலையும் இருப்பதால்., சிறுநீரில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகரித்து., உடலுக்கு நோயை உண்டாக்குகிறது. இதனால் சிறுநீர்த்தாரை தோற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. பெண்கள் வெங்காயத்தை உணவில் அதிகளவில் சேர்த்து கொண்டால், தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி, சிறுநீர்த்தாரை தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கும். 

சிறுநீரை அடக்கும் பட்சத்தில் அடுத்தபடியாக சிறுநீரக பையில் கற்கள் ஏற்படும் அபாயம் இருக்கும். மேலும், யூரிக் அமிலம் உடலில் அதிகமானாலும் சிறுநீரக பையில் கற்கள் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு உணவில் அதிகளவு வெங்காயம் சேர்க்க வேண்டும். மூட்டு வலியை குறைக்க கடுகு எண்ணெய்யுடன் வெங்காய சாற்றை கலந்து மூட்டில் தேய்த்தால், மூட்டு வலி குறையும். வெங்காய சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நுரையீரலில் இருக்கும் நச்சுக்கழிவுகள் வெளியேறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Onion


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal