மொச்சைக்கொட்டை பயறு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!
Benefits of MochaiKottai Payaru 1 Nov 2021
வாயுத்தொல்லை ஏற்படும் என்று பெரும்பாலானோரால் ஒதுக்கி வைக்கப்படும் மொச்சை பயறில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. அவை குறித்து இன்று காணலாம்.
மொச்சைக்கொட்டை பயறில் வெள்ளை, கருப்பு, சிவப்பு, மரம், நாடு என பல வகையான மொச்சைக்கொட்டை பயறுகள் உள்ளன. மொச்சைக்கொட்டையில் இருக்கும் நார்சத்து, பொட்டாசியம், போலேட், சபோனின் போன்றவை உடலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கிறது.
பலரும் மொச்சைக்கொட்டையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படும் என ஒதுக்கி வைக்கிறார்கள். இது பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அதனை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மொச்சைக்கொட்டையை சமைக்கையில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்தால் வாயுத்தொல்லை ஏற்படாது.

மொச்சை பயறில் உள்ள கரையா நார்சத்து சிறந்த மலமிளக்கியாகவும் செய்யபடுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இது உடலுக்கு தேவையான புரதம், நார்சத்து, மினரல் போன்றவற்றையும் கொண்டுள்ளது.
மொச்சைக்கொட்டை பயறில் உள்ள அதிகளவு புரதசத்து, உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி புரதத்தை உடலுக்கு வழங்குகிறது. மேலும், உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து, உடலின் எடையை குறைக்கவும் உதவி செய்கிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Benefits of MochaiKottai Payaru 1 Nov 2021