ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக (டிஜிபி) நியமனம்..!
Davidson Devasirvatham Appointed as DGP for Cooperative Milk Producers Societies Monitoring
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாகவும், உளவுத் துறை கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றியவர்.
முன்னதாக பால் உற்பத்தி ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் ஐபிஎஸ் இப்போது ஊனமாஞ்சேரி காவல் பயிற்சி பள்ளி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதேப்போன்று, உளவுத் துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் ஐபிஎஸ் இப்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
English Summary
Davidson Devasirvatham Appointed as DGP for Cooperative Milk Producers Societies Monitoring