அரசு ஊழியர்களுக்கு வாரம் 02 நாள் ஒர்க் ஃப்ரம் ஹோம்; டெல்லி முதல்வர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், டெல்லி பாஜக தலைமையிலான முதல்வர் ரேகா குப்தாஅரசு இன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் சிக்கனத்துக்கான 07 கோரிக்கையை பிரதமர் மோடி அண்மையில் முன்வைத்திருந்தார். இந்நிலையில், டெல்லி அரசு அதன் ஊழியர்கள் வாரத்துக்கு 02 நாட்கள் வீட்டிலிருந்து பணி புரிய வேண்டும், வாரம் ஒருமுறை கார் பயன்படுத்தாத நாளாக கடைப்பிடிக்க வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அனைவரும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க வேண்டும் முதலான பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. 

அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ள நிலையில், எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், டெல்லி அரசு ஊழியர்கள் இனி வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும் என்றும், அரசு அலுவல் ஆலோசனைக் கூட்டங்களில் 50% கூட்டங்கள் ஆன்லைனில் நடத்த வேண்டும் எனவும், இது அந்தக் கூட்டங்களுக்கு செல்ல வேண்டியதற்கான வாகனப் பயன்பாட்டைக் குறைத்து அதன்மூலம் எரிபொருள் பயன்பாடு குறைவதை உறுதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டெல்லி மாநகராட்சி தனது ஊழியர்களின் பணி நேரங்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும், போக்குவரத்து உச்ச நேரங்களில் நெரிசலும் அதனால் ஏற்படும் எரிபொருள் செலவும் குறையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

 அதேபோல் அரசு வாகனங்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் மாதாந்திர பெட்ரோல் அளவும் 20% வரை குறைக்கப்படுகிறதாகவும்,  இதன்மூலம் அரசு உயரதிகாரிகள் வாகனங்களுக்கு மாதத்துக்கு 200 லிட்டர் வரையில் தான் பெட்ரோல் வழங்கப்படும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மேலும், டெல்லி மக்கள் பொது போக்குவரத்தை அதிகப்படியாக பயன்படுத்தும் வகையில், வாரம் இரு நாள் அனைவரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த ஊக்குவிக்க 'மெட்ரோ மண்டே' அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதேபோல் வாரம் ஒருமுறை மக்கள் கார் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் 'நோ கார் டே' பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள 29 அரசு குடியிருப்புகளில் 58 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 06 மாதங்களுக்கு டெல்லி அரசு எந்தவித புதிய வாகனக் கொள்முதலையும் மேற்கொள்ளாது என அதிரடியான அறிவிப்புகளை முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Chief Minister Announces Work from Home Two Days a Week for Government Employees


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->