தவெக அரசின் தற்போதைய கள நடவடிக்கைகள் என்னென்ன..?பட்டியலிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

அதாவது, தொகுதிகளை ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு ஆகியவை முதல் பணியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மக்களுக்கு நன்றி சொல்லச் செல்வார்கள். ஆனால், அதற்கு முன்பாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாகவும்,  அதன்படி இன்று வில்லிவாக்கம் தொகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அத்துடன், பூஜ்ஜிய ஊழல், பூஜ்ஜிய கமிஷனை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் என்றும், போதைப்பொருள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க சொல்லியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு உத்தரவிட்ட நேரத்தில், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியுள்ளோம் என்றும், காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா இயங்க வலியுறுத்தியுள்ளதாகவும், காவல் நிலையத்தில் யார் புகார் கொடுத்தாலும் வீடியோ பதிவு செய்ய கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசின் நிலங்களை அளவிட உத்தரவிட்டுள்ளதோடு, உடனடியாக அரசு கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவற்றை திறக்க திட்டமிட்ட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் ரிவ்யூ மீட்டிங் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

தவெகவினர், குறிப்பாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் டெண்டர்களில் ஈடுபடக் கூடாது என முதல்வர் உறுதியாக கூறியுள்ளதாகவும், அவர்கள் யாரையும் பரிந்துரைக்க கூடாது என முதல்வர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெண்டர் எடுப்பவர்கள் உரிய நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என கூறியுள்ளதாகவும், அறிவிக்கப்படாத மின்தடை உள்ளது. மின்தடை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், டாஸ்மாக் மூலம் 08 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எங்களுக்கு வருவாயை விட மக்களின் உயிர்தான் முக்கியம். அரசு ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அத்துடன், அரசு ஊழியர்கள் அதிகமாக தவெகவுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொள்வார்  என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Aadhav Arjuna listed the current on the ground activities of the TVK government


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->