உடலுக்குத் தேவையான வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் கொய்யாப்பழம்.! - Seithipunal
Seithipunal


கொய்யாப்பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் அனைத்து சத்துகளையும் கொடுக்கிறது.

கொய்யாப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி,ஏ,இ போன்ற சத்துக்களும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை தருகிறது. அதேபோல், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு, இரைப்பை, குடல் கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடைகிறது.

குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். மேலும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது.

கொய்யா பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் சோடியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது மேலும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

மேலும், தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி அடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of koyya fruit


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->