கெத்தாக வித்தைக்காட்டும் சத்தான கொத்தமல்லி.! - Seithipunal
Seithipunal


அன்றாடம் பயன்படுத்தும் கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள்:

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. இந்த கொத்தமல்லி  இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான  மூலிகையுமாகும். 

கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற  பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

கொத்தமல்லி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொத்தமலை இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும்  கருமை மறையும். மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும்.

கொத்தமல்லி அரைத்து கண்களுக்கு மேலெ பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்ரறும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிச்சியான தோற்றத்தை தரக்கூடியது.

வயிற்று வலி, அஜீரண கோளாறுகல் போன்றவற்றை போக்குகிறது, இது ஈரலை பலப்படுத்துகிறது. கொத்தமல்லி ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.  இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது. 

கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது  போன்றவை குணமாகும்.

கொத்தமல்லிக்கு ஆற்றும் குணம் அதிகம் உண்டு. இது நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்கச் செய்யும். மாதவிலக்கு ஒழுங்கின்மை, வலி ஆகிய பிரச்சினைகளை உடையவர்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது

கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும்.

கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் E இதில் நிறைவாக உள்ளது. செரிமானத்திற்க்கு உதவும் என்சைம்கள் (Enzymes) சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி இலை தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லி இலையைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதில் உள்ள விட்டமின் A, C, பாஸ்பரஸ் (Phosparas) உள்ளிட்ட தாதுஉப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது.

இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லி இலையை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.
வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது. கொத்தமல்லி இலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவருபவர்களுக்கு செரிமானப் பிரச்னை பெரும் அளவுக்குக் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன

கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of coriander leaves


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->