அறுவதா இலையில் உள்ள மருத்துவ பயன்கள்.! - Seithipunal
Seithipunal


அறுவதா இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப ¼ முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சொரியாமை, நாட்பட்ட மார்புசளி, பால்மந்தம், மாந்த சுரம், கணை, வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

அறுவதா இலையை உலரவைத்து நெருப்பிலிட்டு  அவற்றில் இருந்து வரும் புகையை மென்மையாகக் சுவாசித்து வந்தால் இருமல் தணியும். அறுவதா இலையை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும். இதனுடன், இஞ்சி  (ஒரு துண்டு)  சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி விலகும்.

அறுவதா இலைச் சாற்றுடன் ஒமத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயு , வயிற்றுப் பொருமல் , பெரு வயிறு போன்றவை குணமாகும். இந்த இலையுடன் கால்பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வந்தால்  குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.

இது கண் வலியைப் போக்கும், வாந்தியை குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். 

விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும்,ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும்.

பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எறிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.

உபயொகிக்கும் முறை -: இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 - 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம்வலி (இசிவு) இவற்றைப் போக்கும். அல்லது இதன் இலைச்சாற்றில் 10 - 15 துளி தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி ஸ்நானம் செய்விக்கச் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefit of aruvadha ilai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->