தேங்காய் சாப்பிட்டால் இந்தனை நண்பர்களா? தாய்ப்பாலுக்கு சமமான சத்துக்கள்!! என்னென்ன பயன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தேங்காய் நம் அன்றாட வாழ்வில் சமையலுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், பச்சை தேங்காயை தினமும் ஒரு சிறிய துண்டு அளவு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

தேங்காயில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான சோடியம் சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. மேலும், தேங்காயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

பச்சை தேங்காயில் உள்ள மாங்கனீசு, உடலில் கால்சியத்தை சரியாக உறிஞ்ச உதவுகிறது. இதனால் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்கும்.

தேங்காயில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள் உள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதோடு, அந்த ஆற்றலை நீண்ட நேரம் தக்கவைக்கவும் உதவுகின்றன.

மாங்கனீசு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளதால், பச்சை தேங்காய் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. குறிப்பாக அல்சைமர், டிமென்ஷியா போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

தேங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது மலச்சிக்கலை போக்கி குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கிறது. இதன் மூலம் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.

தேங்காயில் தாமிரம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இவை உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ஆக்சிஜன் சீராக சுழல உதவுகின்றன. அதேபோல், செலினியம் சத்து ப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக போராடி, உடலை பாதுகாக்கிறது.

பச்சை தேங்காய் பல நன்மைகளை வழங்கினாலும், அதை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். இதனால் இருதய சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அளவோடு மட்டுமே சாப்பிடுவது நல்லது. மேலும், தினசரி உணவில் பச்சை தேங்காய் சேர்க்கும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you friends if you eat coconut It has the same nutrients as breast milk Do you know what are the benefits


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->