தர்பூசணி பழத்தில் இவ்வளவு நன்மைகளா?....இது தெரிஞ்சா நீங்களே சாப்பிட ஆரம்பிச்சுருவீங்க! - Seithipunal
Seithipunal


கோடைக்காலம் தொடங்கி விட்டாலே நம்மில் பலரும் நீர் தாக்கத்திற்காக தேடுவது  தர்பூசணி பழம் அல்லது தர்பூசணி சாறு. அவ்வாறு இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடுவதன் மூலம், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சற்று புத்துணர்ச்சியை நாம் அடைவோம். சாதாரணமான விலையில் கிடைக்கும் தர்பூசணி பழத்தை நாம் உண்பதன் மூலம், நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. 

தர்பூசணி நன்மைகள் :


*தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் அமினோ அமிலம், ஒழுங்கில்லாத ரத்த நாளங்களை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது 


*லைக்கோபென், சிட்ரூலின் போன்றவை தர்பூசணியில் நிறைந்திருப்பதால், இதய நலன் காக்கப்படுகிறது. இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் குறைகின்றன.

*தர்பூசணியில் பீட்டா கரோட்டீன், லீட்டின் மற்றும் வைட்டமின்-சி போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், விரைவில் வயதாகும் தோற்றத்தை வரவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், கண் ஆரோக்கியத்தை மெருகூட்டுகிறது.


*விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய தசை வலிகளுக்கு, தர்பூசணி சாறு சிறந்த நிவாரணி. விளையாட்டு பயிற்சி, உடற்பயிற்சி, ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சி 'மேற்கொள்பவர்கள், தர்பூசணி ஜூஸ் குடிப்பது நல்லது.

*தர்பூசணியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்தை பாதிக்கும் அம்சங்களை விலக்கி, சிறுநீரகத்தில் கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இவ்வாறு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் தர்பூசணி பழத்தை உண்டு நாம் நலமுடன் வாழ்வோம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are there so many benefits in watermelon fruit If you know this start eating it


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->