அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரத்தில் திடீர் திருப்பம் : அடுத்தது வெளியாகும் அறிவிப்புகள்.! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனின் விவகாரத்தில், சுவரொட்டிகள், கண்டன சுவரொட்டிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், ஒரு சுவரொட்டியில், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், "சுவரொட்டியில் உள்ளாட்சித் துறையில் தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக ஜாதி பெயரை சொல்லி ஆதாயம் தேடும், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் BTO மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு சுவரொட்டியில், "கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்த, அப்பாவிகளை தூண்டி ஜாதி பிரச்சினைகளை உருவாக்க நினைக்கும் 'அரசியல் அனாதைகளை வன்மையாக கண்டிக்கிறோம்' - மாவீரன் அழகுமுத்துக்கோன் யாதவர் நலச்சங்கம்" என்று அந்த கண்டன சுவரொட்டியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சுவரொட்டிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாமல் 'கோனார் மகன்' என்றவரின் டிவிட்டர் பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அவரின் அந்த பதிவில், 

"பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், திமுக, அதிமுக எந்த கட்சியில் எல்லாம் பயணிப்போம். ஆனால், அந்த மனுஷனுக்கு ஒன்னு நா மனசு கலங்கிப் போய் விடும். ஏன்னா அந்த மனுஷன் எங்க உசுரு" என்ற அவரின் பதிவு தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajakannappan issue trend twit


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->