தேனியில் மட்டும் வெற்றி பெற்றதன் ரகசியம்?! சென்னையிலிருந்து ஆட்களை தூக்கிய ஓபிஎஸ் மகன்! வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற, அதிமுக அணி சார்பில், தேனி தொகுதியில் நின்ற துணை முதலமைச்சரின் மகன் ஓ.ப.ரவீந்தர்நாத் மட்டும் வெற்றி பெற்றார். 

அவர் மட்டும் எப்படி வெற்றி பெற முடிந்தது? என்ற கேள்வி அனைவருமே எழுப்பிய நிலையில், அதற்கு ஓபிஎஸ் எடுத்த அதீத முயற்சியும், நிர்வாகிகளை கவனித்த விதம் தான் அவரது மகனை வெற்றி பெற வைத்ததாக அனைவரும் பேசுகிறார்கள். 

ஆனால், உண்மையான காரணம் ஓபிஎஸ் இல்லை அவரது இளைய மகனான ஜெயபிரதீப் தான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அப்படி அவர் என்ன செய்தார் என கேட்ட போது, தேனியில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல என்று செய்திகள் வந்த நிலையில், சென்னையிலிருந்து ஒரு குழுவை தேனிக்கு இறக்கியுள்ளார் ஜெயபிரதீப். யாருக்கும் தெரியாமல் கட்சியினர் தொடர்பே இல்லாமல், தனிப்பட்ட முறையில் களநிலவரத்தை கணக்கு எடுத்துள்ளார் பிரதீப்.

அந்த குழு அளித்த அறிக்கையின் படி தான், எந்த எந்த பகுதிகளில் பிரச்னை உள்ளது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை எல்லாம் கண்டுபிடித்து அத்தனையையும் சரி செய்திருக்கிறார் பிரதீப். 

பிரச்சனைகள் சரி செய்வதோடு இல்லாமல், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களை எல்லாம் அழைத்து ரகசிய கூட்டம் போட்ட பிரதீப், அந்த கூட்டத்தில் அனைவரின் மனம் உருக உருக பேசியுள்ளார். அவர் பேசி முடித்த கனம் அங்கிருந்த அனைவரும் கண்ணீரில் மிதந்து உள்ளார்கள். அந்த மனமுருகும் பேச்சு தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

English Summary

op ravindhranath victory secret


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal