நாங்க படிக்கணும் எங்களுக்கு ஆசிரியரை அனுப்புங்கள்! காஷ்மீர் மாணவர்கள்!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர், பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டது. பள்ளிகளும் செயல்பட துவங்கிவிட்டது. இன்னும் ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு நகரின் உதாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு கணித பாடம் பயிற்றுவிக்க ஆசிரியர் இல்லையாம். இதனால் அவர்கள் கணக்கு பாடமே படிக்க முடியாத சூழல் நிலவுகிறதாம், 

கணித ஆசிரியர் இல்லாத காரணத்தால் எங்கள் கல்வி மிகவும் பாதிக்கப்படுவதாக அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் குற்றம் கூறியுள்ளனர். மேலும், எங்கள் பள்ளிக்கு கணித ஆசிரியரை நியமிக்க அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உதவ வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துளள்னர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

we need math teacher Kashmir students


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->