கற்றல் குறைபாடுடைய மாணவா்களுக்கு எளிய முறையில் கற்பிக்க 'தமிழ் வழி பயிற்சி திட்டம்' - அறிமுகம்! - Seithipunal
Seithipunal


கற்றல் குறைபாடுடைய மாணவா்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்கான பயிற்சித் திட்டம் சென்னை ஐஐடியின் ‘என்பிடெல்’ அமைப்பு மற்றும் ‘மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேசன்’ ஆகியவை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

கற்றல் குறைபாடுடைய மாணவா்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்கான இந்த புதிய பயிற்சித் திட்டத்திற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது.

தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் மாணவா்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் வழி பயிற்சி திட்டம், என்பிடெல் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் கற்றல் குறைபாடுடைய மாணவா்களைக் கண்டறிவதோடு, அம்மாணவா்களுக்கு ஏற்ற முறையில் பயிற்றுவிக்க ஆசிரியா்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தெரிவித்ததாவது,

"தமிழ் வழி பயிற்சி திட்டம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிற மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேசன் தலைவா் டி.சந்திரசேகா் தெரிவித்ததாவது,

"10 முதல் 15 சதவீதம் குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்திட்டம், தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் கற்றல் குறைபாடுடைய மாணவா்களைக் கண்டறிய உதவும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

training program teaching students learning disabilities


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->