குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4, தேர்வுக்கான அறிவிப்பாணை.! டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


குரூப் 4 - தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும் என்று, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, 

டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம்.

தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படும்.

குரூப் 4 தேர்வு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

குரூப்-4 தேர்வில் பழைய காலி பணியிடம் 5555 புதிய காலிப்பணியிடம் 3000 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்வு தாள் பெட்டிகள் மறுபடியும் மூட முடியாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓஎம்ஆர் விடைத்தாளில் கருப்பு மை கொண்டு மட்டுமே எழுத வேண்டும்.

தேர்வர்களுக்கு ஆதார் எண் கட்டாயம். ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும்.

அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும். 

குரூப் 2, குரூப் 2ஏ, தேர்வுக்கான அறிவிப்பாணை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். குரூப்-2 ஏ பிரிவில் 5806 காலிப் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். 75 நாட்களுக்கு பின்பு தேர்வுகள் நடைபெறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC EXAM


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->