எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1299 பணிக்காலியிடங்களை நிரப்புவதற்கான காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 03.05.2025 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

இதற்கான பயிற்சி வகுப்பு சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.04.2025 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

இந்தப் பயிற்சி வகுப்பு போட்டித் தேர்வுகளில் அனுபவம் கொண்ட சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, இலவச மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. மேலும், இந்தப் பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ஆகவே, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த காவல் சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதே போன்று மாவட்டம் தோறும் அரசு சார்பில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

si exam apply date extend


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->