ஷாக் நியூஸ்... நீட் தேர்வு செல்லாது..! - வினாத்தாள் கசிவு புகாரால் தேர்வை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை...!
Shocking news NEET exam invalid Exam canceled question paper leak complaint and action taken
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான முக்கிய நுழைவாயிலாக நீட் தேர்வு கருதப்படுகிறது. இந்த தேசிய அளவிலான தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2026–27 கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்புச் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. இந்தியாவின் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 மையங்களிலும் அமைக்கப்பட்ட மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எதிர்கால மருத்துவக் கனவுகளுடன் தேர்வில் பங்கேற்றனர்.ஆனால், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே பல இடங்களில் வினாத்தாள் கசிந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், மறுதேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், அதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் ஒத்துழைப்புகளையும் தேசிய தேர்வு முகமை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வில் பங்கேற்க மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கூடுதல் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே மாணவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவக் கல்வி கனவுடன் காத்திருந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்தி பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking news NEET exam invalid Exam canceled question paper leak complaint and action taken