பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இனி +2-ல் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் சேரலாம்! - Seithipunal
Seithipunal


2025-2026 கல்வியாண்டில், தமிழ்நாட்டின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இயற்பியல், வேதியியல், கணிதம் (பி.சி.எம்.) ஆகிய பாடப்பிரிவுகளில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

பிற பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்கள், 10-ம் வகுப்பு முடித்து மூன்று ஆண்டு பாலிடெக்னிக் பயில்வதே நடைமுறையாக இருந்தது.

தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2025-26 கல்வியாண்டிலிருந்து, 12-ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், மாணவர்கள் நேரடியாக பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டில் சேரலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், கலை, வணிகம் மற்றும் பிற பிரிவுகளை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்களும் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையை நாட முடியும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

plus 2 Polytechnic College 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->