'தவறு நடந்துவிட்டது, நானே பொறுப்பு...! - சி.பி.எஸ்.இ. குளறுபடியால் அதிரடி முடிவெடுத்த மத்திய கல்வி மந்திரி...! - Seithipunal
Seithipunal


12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சி.பி.எஸ்.இ. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு, ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (OSM)’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய முறையால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாகவும், விடைத்தாள்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரத்திற்கு முழுப்பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இந்த சூழலில், சி.பி.எஸ்.இ. தேர்வு சர்ச்சைகளுக்கு தானே பொறுப்பேற்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,“இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. இது இந்திய அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இதில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

ஆனால் ராகுல் காந்தியின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்ட மனநிலையை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் காரணமாக அவர் விரக்தியில் இருப்பது போல தெரிகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும், டிஜிட்டல் இந்தியா முயற்சிகளுக்கும் அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அவர் ஆதரவாக இருப்பதாக தெரியவில்லை.சி.பி.எஸ்.இ. விவகாரத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால், அதற்கான முழுப்பொறுப்பையும் அரசின் சார்பில் நானே ஏற்றுக்கொள்கிறேன். இது அரசியல் ஆதாயம் தேடும் தருணம் அல்ல. அரசியலை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

தற்போது மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் மன அழுத்தம் மேலும் அதிகரிக்காமல் பாதுகாப்பதே மிக முக்கியமான கடமையாகும். யாருடைய பேச்சோ அல்லது செயல்களோ மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடாது என்பதால் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mistake has been made I am responsible Central Education Minister takes drastic decision due CBSE mess


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->