தமிழக அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவரக்ள் சேர்க்கை!
Minister Anbil Mahesh Poyyamozhi TNGovt School
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டில் 4 லட்சத்தைக் கடந்து இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம் கடந்துவிட்டது. ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை உற்சாகமாக வரவேற்கிறோம்” என்றார்.
மேலும், “அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; அது பெருமையின் அடையாளம்” என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் பசுமை திட்டங்கள், மணவழி கல்வி, இலவச பாடப்புத்தகங்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, உணவுத் திட்டம், குடிநீர் மற்றும் கழிவறைகள் போன்ற பல அம்சங்கள் பெற்றோர்களை ஈர்த்துள்ளதாகவும், அரசுப் பள்ளிகளை மீண்டும் மக்கள் நம்பிக்கையுடன் அணுகத் தொடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister Anbil Mahesh Poyyamozhi TNGovt School