சுட சுட காரசாரமா... வான்கோழி சில்லி செய்யலாமா...?
spicy to taste turkey chili
வான் கோழி சில்லி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வான் கோழி இறைச்சி - கால் கிலோ
சில்லி பவுடர் - ஒன்றை கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எலுமிச்சை - அரைப்பழம்

செய்முறை :
முதலில்,வெங்கயாத்தை வட்ட வட்டமாக நறுக்கி அடுக்கு அடுக்காக எடுத்து வைக்கவும். கோழியை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக போடவும். பின் அதில் சில்லி பவுடர் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த கறியை போட்டு பொரித்து எடுக்கவும்.
பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது பொரித்த சில்லியின் மீது எலுமிச்சை சாறு பிழிந்து அதன் மீது மிளகு தூள் தூவி பொரித்த கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போடவும். இப்போது வான் கோழி சில்லி தயார்.
English Summary
spicy to taste turkey chili