சாலை விபத்தில் உயிரிழந்த பெண் நிர்வாகி குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். 

இந்த நிதி அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு உதவும்" என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2.6.2025 அன்று கழக உறுப்பினரான சரிதா, தனது சொந்த ஊரான இறையனூர் கிராமத்தில் செல்வதற்கு திண்டிவனத்தை கடந்து சென்றபோது, செயின்ட் ஜோசப் பள்ளி எதிரே உள்ள சர்வீஸ் சாலை பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதி, பலத்த காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவரது குடும்ப நிவாரண நிதியாக, ரூ,10 லட்சத்திற்கான காசோலையினை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சரிதாவின் கணவர் எஸ்.கண்ணனிடம் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin compensation provide to dmk member family for died road accident


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->