7 நாளில் கருவளையம் நீங்க இந்த டிப்ஸ் எல்லாம் ட்ரை பண்ணுங்க...!
Try these tips to get rid of dark circles in 7 days
காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.
பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

கிரீன் டீ போட்டவுடன் அதன் பேக்குகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து, ஆறிய பின் கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.
தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.
ரோஸ் வாட்டரை பருத்தி துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைத்து எடுக்க வேண்டும். தினசரி இதனை தொடர்ந்து செய்து வர, கருவளையம் நீங்கும்.
சிறிதளவு தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி, 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.
உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.
English Summary
Try these tips to get rid of dark circles in 7 days