ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் கொள்ளை- இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். 


சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும்  சம்பவம் அதிகரித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ,வேதாரண்யம் ,புதுக்கோட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் அவர்களது படங்களை பறிமுதல் செய்வதும் என வாடிக்கையாக கொண்டுள்ளனர்,

 இலங்கை கடற்படை இதனை தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது .இந்த நிலையில் இலங்கை கடல் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது. கடற்படையின்   அட்டூழியம்ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் தற்போது மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் சென்ற 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 4 படகில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் திடீரென அவர்கள் 3 படகையும் வழிமறித்து மீனவர்களை சரமாரியாக தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்ததை தொடர்ந்து   சக மீனவர்கள் அவர்களை மீட்டு  நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உடனே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Networks worth Rs. 5 lakhs stolen Sri Lankan pirates scheming


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->