பருகூரில் அதிர்ச்சி! வட மாநிலத்திலிருந்து கிலோ கணக்கில் கஞ்சா கடத்தி வந்து விற்கும் வடகன்கள்! பின்னணி என்ன?
Shock in Barugur Northerners are smuggling kilos of ganja from northern states and selling it What background
கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் அச்ச மங்கலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிரானைட் கம்பெனிகள் இயங்கி வருகிறது.அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கிரானைட் கற்களை அறுத்து, பாலிஷ் செய்து விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்கள் இருக்கிறது.

இந்த கிரானைட் கம்பெனிகளில் பெரும்பாலும், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களை வேலைக்காக வடமாநிலத்திலிருந்து அழைத்து வரும் ஏஜென்டாக பீகார் மாநிலம், ஜாம்ஷெட்பூர், வாரிஸ் நகரை சேர்ந்த ராஜேசா (வயது31) இருந்துள்ளார்.
இதில் கடந்த வாரம் பர்கூர் அருகே 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மதன்குமார் (23) மற்றும் மகேஷ் குமார் (25 ) இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
கஞ்சா குறித்து விசாரணை நடத்தியதில் ராஜேசா, கஞ்சா கடத்துவதில் மூளையாக செயல்பட்டதும், கிரானைட் கம்பெனிகளுக்கு ஆட்களை அழைத்து வரும்போது, கஞ்சாவை கிலோ கணக்கில் கடத்தி வந்து இங்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அச்சமங்கலத்தில் ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனையிட்ட போது அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை காவலர்கள் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கும் என கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shock in Barugur Northerners are smuggling kilos of ganja from northern states and selling it What background