தென்காசி இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு - அரசு மருத்துவமனையில் வேலை.!!
job vacancy in government hospitals at thenkasi
தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையங்களில் கலியாகவுள்ள ஆலோசகர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித்தகுதி: ஆலோசகர் பணிக்கு தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம்/TSMC/TNHMC போன்ற மாநில கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களிலிருந்து Bachelor of Naturopathy and Yogic Sceinces கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம்/TSMC/TNHMC போன்ற மாநில கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும், உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தகுதியான நபர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை மாவட்ட இணையதளத்தில் (https://tenkasi.nic.in/notice_category/recruitment/ ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி 20.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ / தபால் மூலமாகவோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்), தென்காசி- 627811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
English Summary
job vacancy in government hospitals at thenkasi